Baththa X Review: பந்தயம் அடிச்சிடுச்சு.. இந்த ஆண்டின் பெஸ்ட் படமே விஜய் சேதுபதியின் ‘பத்தா’ தானாம்!
சென்னை: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, ஒரு பக்க கதை என வித்தியாசமான படங்களை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள பத்தா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
நேற்று இரவே படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர் திரையிடப்பட்ட நிலையில், படத்துக்கான பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகிறது.
இந்த ஆண்டின் சிறந்த காமெடி படம் என்றும் கடைசி வரை தியேட்டரில் வயிறு குலுங்க சிரித்துக் கொண்டே படத்தை பார்த்தோம் என படத்தை பார்த்தவர்கள் 4 ஸ்டார் ரேட்டிங் எல்லாம் கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.
விஜய் சேதுபதி ரகளை ஆரம்பம்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பிட்சா, சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களில் பவர் ஹவுஸ் பர்ஃபார்மன்ஸை காட்டி கோலிவுட் ரசிகர்களின் மனங்களில் மக்கள் செல்வனாக இடம் பிடித்த விஜய் சேதுபதி மீண்டும் தனது ரகளையை ஆரம்பித்துள்ள படம் தான் பத்தா என்றும் இந்த படத்துக்கு 5க்கு 4.25 ஸ்டார் கொடுக்கலாம். சொக்கத்தங்கம், சாய் அபயங்கர் இசை வேறலெவல் என இந்த நெட்டிசன் படத்தை கொண்டாடி தீர்த்துள்ளார்.
இந்த ஆண்டின் பெஸ்ட் படம்: சினிமா விமர்சகர் ராஜசேகர் பத்தா படத்தை பார்த்துவிட்டு இந்த ஆண்டு இதுவரை வெளியானதில் இதுதான் பெஸ்ட் படம் என பாராட்டுப் பத்திரமே வாசித்துள்ளார். டிக்கெட்டுகளை புக் செய்து தியேட்டருக்குச் சென்று படத்தை பாருங்க.. அவ்வளவு தான் என சிம்பிளாக முடித்து விட்டார்.
தங்கமான பையன் நானு: விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள பத்தா திரைப்படத்தை பார்த்த பலரும் கோல்ட் என படத்தை கோர்ட் வேர்ட் பயன்படுத்தி பாராட்டி வருகின்றனர். சுகுமார் சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் படத்தின் ஹைலைட்ஸ் பற்றி எல்லாம் விவரமாக குறிப்பிட்டுள்ளார்.
முதல் பாதியில் வரும் பள்ளியில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் இண்டெர்வெல் பிளாக் பிரம்மாதம் என்றும் இரண்டாவது பாதியில் குழந்தை சாய் மற்றும் விஜய் சேதுபதி இடையே நடைபெறும் அந்த கலாட்டா போர்ஷன் எல்லாம் வேறலெவல் எனக் குறிப்பிட்டுள்ளார். விஜய் சேதுபதிக்கான தனித்துவமான ஃபிளாஷ்பேக், கிளைமேக்ஸ் என எல்லாமே சிறப்பாக உள்ளது. சிறுவன் சாய்க்கு கண்டிப்பாக விருது கிடைக்கும் என்றும் படம் வொர்த்தா உள்ளது என இவரும் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
பந்தயம் அடித்த பத்தா: இந்த வாரம் வெளியாகவுள்ள 5 படங்களில் பத்தா படம் தான் பந்தயம் அடிக்கும் என பலரும் கூறி வருகின்றனர். ஏழு கடல் ஏழு மலை, சிக்மா, அன்பில் அவன், டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை எந்தளவுக்கு என்டர்டெயின் செய்யப் போகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.