📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 30, 2026 12:02 PM

Asian Games: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று ஆசிய சாதனையையும் உடைத்த நீரு தண்டா

Asian Games: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று ஆசிய சாதனையையும் உடைத்த நீரு தண்டா

Asian Games: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று ஆசிய சாதனையையும் உடைத்த நீரு தண்டா - கைனன் செனாய்

நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கி சுடுதலில் டிராப் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா - கைனன் செனாய் ஜோடி புதிய ஆசிய சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றது.

டிராப் கலப்பு அணிகள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை நீரு தண்டா மற்றும் அனுபவ வீரர் கைனன் செனாய் ஜோடி களமிறங்கியது. தொடக்கத்தில் நீரு தண்டா முதல் 5 வாய்ப்புகளில் 3 இலக்குகளை தவறவிட்டு சற்று தடுமாறினாலும், பின்னர் மின்னல் வேகத்தில் சுதாரித்துக் கொண்டார். 36 வயதான மூத்த வீரர் கைனன் செனாய் தனது அபார அனுபவத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து துல்லியமாக இலக்குகளை தகர்த்தார்.

இருவரும் இணைந்து 40-க்கு 34 புள்ளிகளை குவித்து புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர். இதற்கு முன் தோஹாவில் கத்தார் அணி படைத்திருந்த ஆசிய சாதனையை இந்திய ஜோடி தகர்த்தெறிந்தது. கத்தார் அணி 32 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், சீன அணி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றன. ஈரான் அணி 4வது இடத்தைப் பிடித்து வெளியேறியது.

இயந்திரக் கோளாறால் தாமதம் போட்டியின் போது முதல் மையத்தில் இருந்த டிராப் இயந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் போட்டி சுமார் 5 நிமிடங்கள் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த தொடரில் இந்திய வீராங்கனை நீரு தண்டா வெல்லும் 3வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே மகளிர் டிராப் தனிநபர் பிரிவில் புதிய ஆசிய சாதனையுடன் தங்கமும், மகளிர் டிராப் அணிகள் பிரிவில் வெள்ளியும் வென்றிருந்தார். தற்போது கலப்பு இரட்டையர் பிரிவிலும் தங்கப் பதக்கத்தை வென்று, ஒரே ஆசிய தொடரில் 2 தங்கம் மற்றும் 1 வெள்ளி என மொத்தம் 3 பதக்கங்களை குவித்து இந்திய துப்பாக்கி சுடுதல் வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்துள்ளார்.