அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் : அகவிலைப்படி உயர்வுடன் போனஸ் வழங்கப்படுமா ? முன் வைக்கப்படும் கோரிக்கைகள்
மத்திய அரசு அவர்களின் ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு நற்செய்தியை வழங்கவுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் நிலையில் அத்துடன் சேர்த்து பண்டிகை கால போனஸும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவற்றில் 3 % உயர்வு வழங்கியிருக்கின்றனர். இந்த முடிவிற்கு பிறகு மொத்த அகவிலைப்படி என்பது 60 சதவீதத்தில் இருந்து 63 % ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வை அரசு ஆண்டிற்கு இருமுறை ( ஜனவரி மற்றும் ஜூலை ) நிர்ணயிக்கப்படுகிறதுஇந்த அறிவிப்பு செப்டம்பர் இறுதியில் வெளியாகி இருக்கும் நிலையில் ஊழியர்களுக்கு அவர்களின் அக்டோபர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துடன் சேர்த்து மூன்று மாத நிலுவை தொகை வழங்கப்படும்ஜூலைமாத நிலுவை தொகை -3 % கூடுதல் தொகைஅதைப்போல ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் 3 % கூடுதல் தொகை நிலுவையில் உள்ளது.சம்பளம் கணக்கீடுஅடிப்படை சம்பளம் 18000 ரூபாயாக இருந்தால் மூன்று மாத மொத்த நிலுவை தொகை 1,620 ஆகும். 63% அகவிலைப்படியில் புதிய படி மாதம் 11,340 ரூபாய். மாதாந்திர உயர்வு 540 ரூபாய்அடிப்படை சம்பளம் 35,400 ரூபாயாக இருந்தால் மூன்று மாத நிலுவை தொகை 3,186 ரூபாய் மற்றும் 63% அகவிலைப்படியில் புதிய படி என்பது மாதம் 22,302 ரூபாய், மாதாந்திர உயர்வு 1,062 ரூபாய்அடிப்படை சம்பளம் 56,100 ஆக இருக்கும் பட்சத்தில் 63% அகவிலைப்படியில் புதிய படி மாதம் 35,343 ரூபாய். மாதாந்திர உயர்வு 1,683 ரூபாய் மற்றும் மொத்த நிலுவை தொகை 5,049 ரூபாய்போனஸ் கோரிக்கைமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு ஒரு கோரிக்கை வைத்து இருக்கின்றனர். அதாவது தசரா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பண்டிகைக்கு முன்பாகவே 21,000 வரை போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை அரசு ஏற்கும் பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிததாரர்களுக்கு டபுள் ஜாக்பாட் கிடைக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை