📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 28, 2026 12:00 PM

“அரசு ஓடிடி தளம் குறித்து விரைவில் நல்ல செய்தி வரும்”

“அரசு ஓடிடி தளம் குறித்து விரைவில் நல்ல செய்தி வரும்”

குஷ்பு சுந்தருக்கு கேடயம் வழங்குகிறார் அமைச்சர் ராஜ்மோகன். தயாரிப்பாளர் சத்தியஜோதி தியாகராஜன், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், தயாரிப்பாளர் டி.சிவா அருகில் உள்ளனர்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​தின் 6-வது ஆண்டு பொதுக்​குழுக் கூட்​டம் சென்​னை, வடபழனி​யில் நடை​பெற்​றது. இந்த நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்து கொண்​டார். கடந்த ஆண்டு அக்​டோபர் முதல் இந்​தாண்டு செப்​டம்​பர் வரை வெளி​யான குறிப்​பிடத்​தக்க மற்​றும் வெற்​றிகர​மான தமிழ் திரைப்​படங்​களின் தயாரிப்​பாளர்​கள் கவுரவிக்​கப்​பட்​டனர்.

அவர்​களுக்​குக் கேட​யம் மற்​றும் பதக்​கம் வழங்​கப்​பட்​டது. இந்​நிகழ்ச்​சி​யில் குஷ்பு சுந்​தர், சவுந்​தர்யா ரஜினி​காந்த், விஜய் ஆண்​டனி, கண்​ணன் ரவி, தமிழ் திரைப்பட தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​தின் தலை​வர் ஜி.கே.எம். தமிழ் குமரன், இணைச் செய​லா​ளர் சுஜாதா விஜயகு​மார், நடப்பு தயாரிப்​பாளர்​கள் சங்க நிர்​வாகி​கள் மற்​றும் செயற்​குழு உறுப்​பினர்​களும் கலந்து கொண்​டனர்.

பொதுக்​குழு​வில் எடுக்​கப்​பட்ட கோரிக்​கைகள் அடங்​கிய மனுவை அமைச்​சர் ராஜ்மோக​னிடம் நிர்​வாகி​கள் வழங்​கினர். பின்​னர் அவர் பேசும்​போது, “நானும் இந்த சினிமா குடும்​பத்​தில் ஒருத்​தன். சினிமா துறை மேல் அரசுக்​குத் தனிக் கவனம் உள்​ளது. அங்​கிருந்து வந்​தவர்​தான் முதல்வராக உள்​ளார். இனி தமிழக அரசு விருதுகள் ஆண்​டு​தோறும் வழங்​கப்​படும்.

சிறு பட்​ஜெட் படங்​களுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​படும். தமிழ் சினி​மாக்​களுக்​கான அரசு ஓடிடி தளம் அமைப்​பது குறித்து வெகு விரை​வில் நல்ல செய்தி வரும். இது குறித்து நாம் அனை​வரும் அமர்ந்து முத்​தரப்பு பேச்​சு​வார்த்தை நடத்த வேண்​டும். இடைத்​தேர்​தல் முடிந்த பிறகு இது தொடர்​பாகப் பேசுவோம்” என்​றார்.

முன்​ன​தாக, “4 சதவீத உள்​ளாட்சி பொழுது​போக்கு வரியை நீக்​குதல். சிறு முதலீட்​டுத் திரைப் படங்​களுக்​கான நிலு​வை​யில் உள்ள மானி​யங்​களை வழங்​குதல், தற்​போதுள்ள ரூ.7 லட்​சம் மானி​யத்தை ரூ.10 லட்​ச​மாக உயர்த்​துதல், சிறு முதலீட்​டுத் தமிழ்த் திரைப்​படங்​களுக்கு பிரத்​யேக​மாக ஓடிடி தளத்தை உரு​வாக்​கி, அவற்​றைப் பார்​வை​யாளர்​களிடம் கொண்டு சேர்த்​தல் என்​பது உள்பட பல்​வேறு கோரிக்​கைகள் அடங்​கிய மனு அமைச்​சர் ராஜ்மோக​னிடம் வழங்​கப்​பட்​டது.