📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 12, 2026 09:04 AM

அமைச்சர் பதவி கேட்கப்போவதும் இல்லை; தவெகவுடன் கூட்டணி என்பது வதந்தி மட்டுமே: அன்புமணி உறுதி

அமைச்சர் பதவி கேட்கப்போவதும் இல்லை; தவெகவுடன் கூட்டணி என்பது வதந்தி மட்டுமே: அன்புமணி உறுதி

அமைச்சர் பதவி கேட்கப்போவதும் இல்லை; தவெகவுடன் கூட்டணி என்பது வதந்தி மட்டுமே: அன்புமணி உறுதி

கோவை,அக்.11: தவெகவுடன் கூட்டணி என்பது வெறும் வதந்தி மட்டுமே என அன்புமணி கூறினார்.

பாமக தலைவர் அன்புமணி கோவை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி:

தமிழகத்தில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசாங்கத்திற்கு அனுபவம் போதவில்லை. அரசியலும் புதுசு, நிர்வாகமும் புதுசு. அதிகாரிகள் கொடுக்கும் அழுத்தத்தின்பேரில் செயல்பட்டு வருகிறார்கள். முதலமைச்சர் விஜய், மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். தொடர்ந்து அழுத்தம் கொடுத்து பல வழக்குகளை தொடுத்து, மேதாது அணை கட்டுவதை நிறுத்த வைக்க வேண்டும்.

தவெகவுடன், பாமக கூட்டணி அமைக்க உள்ளதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வதந்தி. நாங்கள் யாரிடமும் அமைச்சர் பதவி கேட்கவில்லை, கேட்கப்போவதும் இல்லை. தேஜ கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துகளை கேட்ட பின்னரே கூட்டணி தொடர்பான நிலைப்பாடு எடுக்கப்படுகிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து இப்போது ஒன்றும் சொல்ல முடியாது. அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

அதிமுக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்

‘தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் பெரிய ஆச்சரியம் எதுவும் அளிக்கவில்லை. இத்தொகுதிகளில் ஆளுங்கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற அதிமுக தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இந்த தேர்தல் முடிவுகளை அதிமுக தலைமை தீவிரமாக ஆய்வுசெய்து, சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். காரணம், தமிழ்நாட்டை அதிக முறை ஆண்ட கட்சி அதிமுக.’ என்று அன்புமணி தெரிவித்தார்.