ஆதார் கார்டில் இனி Care of கிடையாது : HoF புதிய விதிகள் இதோ
UIDAI தற்போது ஆதார் சேர்க்கை மற்றும் அப்டேட் செய்யும் முறையில் மாற்றத்தை கொண்டு வந்து இருக்கின்றது. அதன்படி இனி ஆன்லைன் அல்லது ஆப்லைன் என இரண்டிலும் Care of என்ற காலத்தை படிவத்தில் இருந்து நீக்கியிருக்கின்றது. இந்த மாற்றத்தை தான் தற்போது ஆதார் கார்டு கொண்டுவந்துள்ளது. இந்த மாற்றத்திற்கு பிறகு மக்களிடையே ஒரு சிறு குழப்பம் நிலவி வருகின்றது. அதாவது இனி ஆதார் கார்டில் தந்தை ,கணவர் அல்லது காப்பாளரின் பெயர் இடம்பெறுமா ? பெறாதா ? என்ற குழப்பம் இருந்து வருகின்றது.மேலும் பழைய முறைப்படி ஆதார் கார்டில் Care of இடத்தில் தந்தை, கணவர் அல்லது காப்பாளர் பெயர் இருந்தால் என்ன செய்வது ? என்ற குழப்பமும் மக்களிடையே இருக்கின்றது. அவ்வாறு குழம்பும் மக்களுக்கு அவர்களின் குழப்பத்தை தணிக்கும் ஒரு செய்தி கிடைத்துள்ளது. அதாவது பழைய ஆதார் கார்டு செல்லும் என்றும் யாருடைய பெயரும் நீக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏனினும் எதிர்காலத்தில் உங்களுடைய முகவரியை மாற்றும்போது அல்லது உறவினர்களின் பெயரை சேர்க்கும்போது Head of Family (HoF ) என்ற அடிப்படையில் புதுப்பிப்பு முறையை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறதுCare of (C/O) நீக்கப்பட்டதற்கான காரணம்பழைய முறையில் சிலர் சரியான சான்று இல்லாமலே தங்களுக்கு விருப்பமான பெயரை (C/O) பட்டியலில் சேர்த்துக்கொண்டு வந்தனர். இதனால் சில முறைகேடுகள் ஏற்பட்டன.இதனை தடுப்பதற்கு தான் UIDAI (C/O) என்பதை நீக்கியுள்ளதுHoF விதிப்படி ஆன்லைனில் ஆதார் முகவரியை மாற்றுவது எப்படி ?UIDAI என்ற அதிகாரபூர்வ போர்ட்டலுக்கு (myaadhaar.uidai.gov.in ) என்பதற்கு செல்லவும்update address பிரிவிற்கு சென்று HoF based address update என்பதை கிளிக் செய்யவும்குடும்ப தலைவராக இருக்கும் உங்களுடைய பெற்றோர் அல்லது கணவர் ஆதார் எண்ணை உள்ளிட்ட வேண்டும். அதன் பின் அவர்களுக்கு உங்களுடனான உறவுமுறையை தேர்ந்தெடுக்கவும்ரேஷன் கார்டு, திருமண சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்ஆன்லைனில் இதற்கான கட்டணமான 75 ரூபாயை செலுத்தவும்இவ்வாறு விண்ணப்பித்தவுடன் HoF மொபைல் எண்ணிற்கு லிங்க் அனுப்பி வைக்கப்படும். அந்த கோரிக்கையை நாம் 30 நாட்களுக்குள் ஏற்க வேண்டும்