📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 20, 2026 11:32 PM

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய மற்றும் பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட்) தேர்ச்சி பெறுவதை உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது. மேலும், இதுவரை தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் தேர்வெழுதி தேர்ச்சி பெறவும் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஹால் டிக்கெட் வெளியீடு

அதனால் ஆசிரியர்களின் வசதிக்காக 3 சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அந்த வகையில் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான முதல் சிறப்பு டெட் தேர்வு ஜூலை 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. தற்போது டெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்