📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news September 22, 2026 02:03 PM

3 கி.மீ., ஆற்றில் பயணித்து யானைக்குட்டியை மீட்ட மீனவர்கள்

3 கி.மீ., ஆற்றில் பயணித்து யானைக்குட்டியை மீட்ட மீனவர்கள்

-நமது நிருபர்-

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டியை, மீனவர்கள் படகில் 3 கி.மீ., துாரம் பின் தொடர்ந்து சென்று பத்திரமாக மீட்ட வீடியோ வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்கத்தின், மால்பஜார் பகுதியில் டீஸ்டா ஆற்றில் மீனவர்கள் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் யானைக்குட்டி ஒன்று அடித்துச் செல்லப்படுவதை கவனித்தனர். அதை மீட்க முயற்சித்தனர்; முடியவில்லை. தங்கள் படகை யானைக்குட்டி அடித்துச் செல்லப்படும் திசையில் செலுத்தினர். ஆற்றின் வேகமான நீரோட்டத்திலும் 3 கி.மீ., துாரம் யானைக்குட்டியை பின்தொடர்ந்தனர்.

பாதுகாப்பான ஒரு இடம் சென்றதும், ஆற்றில் இருந்து யானைக்குட்டியை மீட்டு, பத்திரமாக ஆற்றங்கரைக்கு கொண்டு வந்தனர்; வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர், மீட்கப்பட்ட யானைக்குட்டியை அதன் தாயுடன் சேர்த்து வைத்தனர். மீனவர்கள் யானைக்குட்டியை மீட்ட வீடியோ வலைதளத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.