📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 15, 2026 11:30 AM

 1.10 கோடி டன் யுரேனியம் சவுதி அரேபியாவில் கண்டுபிடிப்பு

 1.10 கோடி டன் யுரேனியம் சவுதி அரேபியாவில் கண்டுபிடிப்பு

ரியாத்: மேற்காசியாவில் நிலவும் போர் சூழலுக்கு மத்தியில் சவுதி அரேபியாவில், 1.10 கோடி டன் யுரேனியம் தாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் சர்வதேச அணுசக்தி முகமையின் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற சவுதி அரேபியாவின் எரிசக்தித்துறை அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், தங்கள் நாட்டின் மதினா பகுதியில், 'ஜபல் சயீத்' திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட புவியியல் ஆய்வில், 1.10 கோடி டன் யுரேனியம் செறிந்த தாது மற்றும் பிற அரிய வகை கனிமங்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார்.

ஒப்பந்தத்தின் கீழ், சவுதியின் சுரங்க நிறுவனமான மாடன் மற்றும் அமெரிக்காவின் எம்.பி., மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, அரிய கனிமங்களை பிரித்தெடுக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளன.